AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
மாரடைப்பு பயமா? இளமையிலே வரும் மாரடைப்பை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
இன்றைய காலத்தில் இளையவர்களிடையே மாரடைப்பு அதிகரித்துவருவது கவலைக்கிடமானது. சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் இதை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், பெருமளவில் குறைக்க முடியும். இதை உணர்த்தும் வகையில் இளமையில் மாரடைப்பு வராமல் இருக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
சீரான உடற்பயிற்சி அவசியம்
நாளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் வேகமான நடை, ஓட்டம், சைக்கிள் அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனால் இதய தசைகள் பலப்படும் மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.
ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்
எண்ணெய், ஜங்க் ஃபுட், அதிக உப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை குறைத்தல் முக்கியம். காய்கறி, பழம், முழுத்தானியம், பருப்பு வகைகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் இதயத்திற்கு நல்லவை.
இதையும் படிங்க: இதயத்தில் ப்ளாக் வராமல் இருக்கணுமா! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க! அதிலிருந்து தப்பிக்கலாம்...
உடல் எடை கட்டுப்பாடு
அதிக எடை மாரடைப்பு அபாயத்தை உயர்த்தும். உடல் எடையை BMI அடிப்படையில் கட்டுப்படுத்துவது அவசியம்.
மனஅழுத்தம் குறைத்தல்
தொடர்ந்த மனஅழுத்தம் இதய நோய்களின் முக்கிய காரணிகளில் ஒன்று. தியானம், யோகா, ஆழ்ந்த மூச்சுப் பபயிற்சி போன்றவை மனஅழுத்தத்தை குறைக்க உதவும்.
புகைப்பழக்கம் மற்றும் மதுபானத்தைத் தவிர்க்கவும்
புகைபிடித்தல் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். அதேபோல் அதிக அளவு மதுபானம் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். இவை இரண்டையும் தவிர்த்தல் மிக முக்கியம்.
ஒழுங்காக மருத்துவ பரிசோதனை
கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை நியமித பரிசோதனை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதய ஆரோக்கியம் வாழ்க்கை முறையால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. சீரான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் இளமையிலேயே மாரடைப்பு வருவதற்கான அபாயத்தை கணிசமாக குறைக்கலாம்.