பறக்கும் விமானத்தில் திடீரென முன் சீட்டில் அமர்ந்திருந்த பயணியின் கழுத்தை நெறித்து கொடூரமாக தாக்கிய இந்திய வாலிபர்! நடந்தது என்ன? வீடியோ வெளியாகி பரபரப்பு...



indian-man-attacks-passenger-on-american-flight

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பயணியை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் தேதி, பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு புறப்பட்ட விமானம் ஒன்றில் இந்தக் கோர சம்பவம் நடந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவரான இஷான் ஷர்மா (21 வயது), இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவர், முன்னால் அமர்ந்திருந்த கீனு எவென்ஸ் என்பவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினார். இருவரும் ஒருவருக்கொருவர் கழுத்தைப் பிடித்து நெரித்து தாக்கும் காட்சிகள் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தின.

இஷான் ஷர்மா பயணியை மிரட்டிய போது, அந்த பயணி அவசரநிலை பொத்தானை அழுத்தினார். அதனைக் தொடர்ந்து அவர் மீது கோபமடைந்த இஷான், அவரை கழுத்துப் பிடித்து நெரித்துள்ளார். இந்த சம்பவம் விமான ஊழியர்களையும் பயணிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிங்க: இது என் கடைசி வீடியோ! யாரையும் காதலிக்காதீர்கள்.! இன்ஸ்டாவில் லைவில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

போலீசாரால் கைது செய்யப்பட்ட இஷான் ஷர்மா

விமானம் மியாமியில் தரையிறங்கியதும், சம்பந்தப்பட்ட பயணி போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் இஷான் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தாக்குதலின் வீடியோ வைரல்

இந்தச் சம்பவத்தின் வீடியோ பதிவுகள் இன்ஸ்டாகிராம், எக்ஸ் (முன்பு ட்விட்டர்) மற்றும் யூடியூபில் பரவி வருகின்றன. அந்த வீடியோவில் இருவரும் கடுமையாக சண்டையில் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: பாபா வங்கா கணிப்பின்படி பேரழிவு 82% உறுதி! இனி நடக்கப்போவது என்ன? அதிர்ச்சியில் மக்கள்...