கழுத்தில் தாலியுடன் சமந்தா.. திருமணத்திற்கு பின் வெளியான புதிய லுக்.! 



Samantha Marries Bollywood Director Raj Nidimoru Wedding Photos Go Viral and Ring Worth ₹1.5 Crore Creates Buzz 

நடிகை சமந்தா, இந்தி இயக்குனர் ராஜ் நிடிமோருவை கடந்த டிசம்பர் 1 அன்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு பிறகு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த சமந்தா கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி இந்தி பட இயக்குனரான ராஜுவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வருவதாக பேசப்பட்ட நிலையில், தற்போது திருமணம் தொடர்பான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

சமந்தா - ராஜ் நிடிமோரு திருமணம்:

இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருக்கின்றனர். இவர்களுக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமான சமந்தா ஒரு கட்டத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாகவும் நடித்திருக்கிறார். 

இதையும் படிங்க: காதலரை கரம்பிடித்த சமந்தா?.. ஈஷா யோகா மையத்தில் நடந்த ரகசிய திருமணம்.!

samantha

சமந்தா உடல்நலம்:

தெலுங்கு திரையுலகில் கால் பதித்த அவர், 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். பின் 4 ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்ட நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் முடித்தார். அதனைத் தொடர்ந்து உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்த சமந்தா உடல் நலம் தேறி பின் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

திருமண மோதிரம்:

இந்நிலையில் சமந்தா மற்றும் ராஜ் நெடிமோரு திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் சமந்தா திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் சமந்தா அணிந்திருந்த மோதிரம் ஒன்றரை கோடி மதிப்புடையது என்ற தகவலும் வைரலாகி வருகிறது.