என்னை கேட்டு பெத்தீங்களா? என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை.... அதனால் வேலைகெல்லாம் போக முடியாது! பெற்றோருக்கு 21 வயது வாலிபர் கொடுத்த அதிர்ச்சி!!!



21-year-old-anti-natalism-controversy-parents-responsibility-debate

சமூக வலைதளங்களில் அடிக்கடி பல்வேறு கருத்து மோதல்கள் உருவாகி மறைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் முன்வைத்த கருத்து, தலைமுறை சிந்தனைகளையே கேள்விக்குட்படுத்தும் வகையில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

என்னை கேட்டு பெத்தீங்களா?” என்ற கேள்வியுடன் தொடங்கிய அவரது பேச்சு தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தன்னைப் பிறப்பிக்க யாரும் அனுமதி கேட்கவில்லை என்பதால், வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், வாழ்நாள் முழுவதும் தன்னை பொருளாதார ரீதியாக பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமை என்றும் அவர் வாதிட்டுள்ளார். இந்த கருத்து பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரபரப்பு

இளைஞரின் இந்த நிலைப்பாடு ஒரு புறம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. “வளர்ப்பு என்பது ஒரு கட்டத்தில் வரை மட்டுமே பெற்றோரின் பொறுப்பு; அதற்கு பிறகு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே கட்டியெழுப்ப வேண்டும்” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பெற்றோர் பொறுப்பு மற்றும் தனிநபர் சுயநிலை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: எந்த கட்சி வந்தாலும் DMK தான் பெஸ்ட்! படிக்காதவுங்க தான் TVK… BJP…. ADMK…. எல்லாம்... இணையத்தில் அனல் பறக்கும் இளைஞரின் வீடியோ!

‘Anti-natalism’ விவாதம் மீண்டும் முன்னிலைக்கு

இந்நிலையில், இந்த கருத்து ‘Anti-natalism’ எனப்படும் பிறப்பு எதிர்ப்பு கொள்கையையும் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது. குழந்தையை உலகிற்கு கொண்டு வருவது பெற்றோரின் தனிப்பட்ட முடிவா? அல்லது குழந்தையின் சம்மதமின்றி பிறப்பித்ததற்கான முழுப் பொறுப்பும் பெற்றோருக்கே உள்ளதா? என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

தலைமுறைகளுக்கு இடையிலான சிந்தனை வேறுபாடுகள், குடும்பப் பொறுப்பு மற்றும் தனிநபர் சுயாதீனம் போன்ற முக்கிய அம்சங்களை இந்த விவாதம் வெளிச்சமிடுகிறது. இணையத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை, சமூகத்தின் மதிப்பீடுகள் மற்றும் குடும்ப உறவுகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையையும் தூண்டி வருகிறது.

 

இதையும் படிங்க: எப்படி ஆட்சி மாறுதுனு பாருங்க....ஒருத்தரும் தப்பிக்க முடியாது! சவால் விட்ட தவெக ஆதரவாளர்… வைரலாகும் வீடியோ…!!