AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
காதலரை கரம்பிடித்த சமந்தா?.. ஈஷா யோகா மையத்தில் நடந்த ரகசிய திருமணம்.!
நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோருவின் திருமணம் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்ற ஓராண்டில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா என்பவரை மனம் முடித்தார். தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
பிரபல இயக்குனருடன் காதல்?
இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கான காரணம் கூறப்படாததால் பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதற்கு நடிகை சமந்தாவின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படாத நிலையில், பிரபல பாலிவுட் பத்திரிகையிலும் சமந்தா மற்றும் ராஜ் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என கூறப்பட்டது.

நடிகை சமந்தா 2வது திருமணம்?
இந்த நிலையில் இன்று ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்க பைரவ கோவிலில் நடிகை சமந்தாவை ராஜ் நிடிமோரு கரம் பிடித்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்களது திருமணம் இன்று அதிகாலை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், நடிகையின் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சமந்தாவின் 2 வது திருமணம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.