ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!



actress-nanditha-swetha-workout-photos-viral

தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, அசுரவதம், ரத்தம், ரணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 வெப் சீரிஸிலும் கலக்கும் நந்திதா 

இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் மேலும் நடிகை நந்திதா ஸ்வேதா வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள BENNY என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகி வைரலானது.

ஜிம்மில் தீவிர ஒர்க்அவுட் 

நடிகை நந்திதா ஸ்வேதா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.