புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நினைத்து பார்க்கவே பயமா இருக்கு!! மீனவரை விழுங்கிய திமிங்கலம்.. வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வந்த நபர்..!
கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவரை திமிங்கலம் விழுங்கி பின்னர் வெளியே துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள Massachusetts என்ற மாகாணத்தின் Provincetown என்ற பகுதியில் வசிக்கும் மீனவர் மைக்கேல் பெக்கார்ட். 56 வயதாகும் இவர் பல ஆண்டுகளாக கடலில் இறால் பிடிப்பதை தொழிலாக செய்துவருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மைக்கேல் பெக்கார்ட் சம்பவத்தன்று ஆழ்கடலில் ராட்சச இறால்களை பிடிக்கும் பணியை செய்துகொண்டிருந்துள்ளார்.
அப்போது ஏதோ ஒன்று அவரை உரசுவதுபோல் உணர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரை சுற்றி எல்லாமே இருட்டாக மாறியுள்ளது. அதன்பின்னர்தான் அவருக்கு தெரிந்துள்ளது, திமிங்கிலம் ஒன்று தன்னை விழுங்கிவிட்டது என்று. இப்படியே 30 முதல் 40 நிமிடம் வரை அவர் திமிங்கிலத்தின் வயிற்றுக்குலையே இருந்துள்ளார்.
பின்னர் அந்த திமிங்கிலம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அவரை வெளியே துப்பியுள்ளது. உயிருடன் மீண்டும் நீர் பரப்பிற்கு வந்த அவர், கடலில் இருந்து மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.