அட கொடுமையே... குழந்தையை இரையாக தூக்கி உயர பறந்த கழுகு.....! திகில் வீடியோ காட்சி...

அட கொடுமையே... குழந்தையை இரையாக தூக்கி உயர பறந்த கழுகு.....! திகில் வீடியோ காட்சி...


Eagle try to flew with child video

கழுகு ஒன்று தனக்கு இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதறவைத்து வருகின்றது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், பார்க் ஒன்றில் தன் குழந்தையுடன் வந்த தந்தை ஒருவர் தன் குழந்தையை பார்க்கில் தனியாக அமர வைத்து விட்டு, அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து கொண்டிருக்கிறார். அந்த  சமயத்தில் கழுகு ஒன்று வேகமாக  பறந்து வந்து தனியாக  உள்ள அந்த  குழந்தையின் ஆடையை தன் காலால் கொத்தி தூக்கி சென்றது. இதை பார்த்து குழந்தையின்  தந்தை  பதறியடித்து  ஓடி  வருகிறார். அந்த  கழுகு குழந்தையை சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற பின்பு குழந்தையை எடை தாங்க முடியாமல் கீழே போட்டு விடுகிறது. இதோ  அந்த வீடியோ காட்சி....