Video : அண்ணன் - தங்கைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்! எப்படிப்பட்ட சடங்குகள்! என்ன காரணம்னு பாருங்க! வைரலாகும் வீடியோ....



thailand-twins-marriage-cultural-belief-viral

தாய்லாந்தில் ஒரு வியப்பூட்டும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 4 வயதான இரட்டை குழந்தைகள். ஒரு அண்ணன் மற்றும் தங்கை  அவர்களின் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் சமூக கலாச்சார சம்பவமாக மாறியுள்ளது.

திருமணங்கள் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான கலாச்சார மரபுகளைக் கொண்டவை. சில சமயங்களில், திருமண சடங்குகள் நம்பிக்கைகளின் அடிப்படையில் பரிகாரமாகவும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் கூட சில கிராமங்களில் மழை வர வேண்டி கழுதைகள் திருமணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்த மதத்தின் நம்பிக்கை

தாய்லாந்து புத்த மதத்தில், ஆண் மற்றும் பெண் இரட்டையர்கள் முன் ஜென்மத்தில் காதலர்கள் என நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில், அவர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும், இல்லையெனில் கெட்ட சகுணம் ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: Video : வீட்டின் முன்பு நின்று பிச்சை கேட்ட நபர்! திடீரென ஓரமாக சென்ற பூனையை அடித்து கொன்று! இறுதியில் அவர் செய்த கொடூர செயலை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..

நம்பிக்கையால் நடத்தப்பட்ட திருமணம்

இந்த நம்பிக்கையின் அடிப்படையில், பெற்றோர் அவர்களுடைய குழந்தைகளுக்கே திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தாய்லாந்து சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கைகளை பிரதிபலிக்கிறது. திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வினோத திருமண நிகழ்வு தற்போது நாடுகளை கடந்து இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது. பலரும் அதனை பாரம்பரிய நம்பிக்கையின் ஓர் எதிரொலி எனவும், சிலர் விமர்சனங்களுடன் பார்க்கின்றனர்.இதோ அந்த வீடியோ காட்சி...

 

இதையும் படிங்க: Video : கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது இன்னொரு கை! பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...