டெக்னாலஜி

வாட்ஸ் அப் வதந்திகளுக்கு முற்று புள்ளி. இனி 5 பேருக்கு மேல் மெசேஜ் பார்வார்ட் செய்ய முடியாது..!

Summary:

Whatsapp gonna restrict people to forward messages

வாட்சப்பில் ஒரு மெசேஜை 5 பேருக்கு மேல் பார்வர்ட் செய்ய முடியாத வகையில் ஒரு  அப்டேஷனை விரைவில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் அப் மூலம் நொடி பொழுதில் உலகம் முழுவதும் எந்த ஒரு தகவலும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது. அந்த தகவல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று கூட பார்க்காமல் உடனடியாக மற்றவர்களுக்கு பார்வார்டு செய்வதால், தேவை இல்லாத கலவரங்கள், பிரச்சனைகள் வர தொடங்குகிறது.

மேலும், செய்தியின் உண்மைத்தன்மை கூட தெரியாமல் சில பொய்யான செய்திகளால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சமீபத்தில் வட மாநிலத்தவர்கள் தென் மாநிலம் வந்து குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பொய்யான தகவல் பரவியது.

இந்த தகவலால், பெரிதும் பாதிக்கப்பட்டது சாதாரண மக்களே. சந்தேகத்தின் பேரில் சில நபர்களை ஊர் மக்களே தவறாக புரிந்துக் கொண்டு அவர்களை அடித்தே கொன்ற சம்பவம் முடிக்கவும் கொடுமையானது.

இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் பார்வார்ட் மேசெஜ் என்றால், உடனடியாக தெரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது வாட்ஸ் ஆப் நிறுவனம். ஆனால் இதற்கு மத்திய அரசு ஓகே சொல்ல வில்லை...இதனை அடுத்து தற்போது ஒரு மெசேஜை பார்வார்ட் செய்ய  வேண்டும் என்றால் 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலை வர உள்ளது.

இந்த நடைமுறை விரைவில் வரும் தருவாயில் தேவை இல்லாத வதந்திகள் பரவாமல் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement