ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
லிப்ட்டுக்குள் வைத்து வாயில்லா ஜீவனை! ஐயோ பார்க்கவே நெஞ்சே பதறுதே! வெளியான அதிர்ச்சி வீடியோ....
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரம் கராடி பகுதியில் உள்ள பஞ்சஷில் குடியிருப்புத் தொகுதியில் கடந்த ஜூலை 3ஆம் தேதி, ஒரு கோல்டன் ரிட்ரீவர் வகை செல்லப்பிராணி நாய் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், அந்த நாயை அழைத்துச் சென்ற டாக் வாக்கர், லிப்டில் நாயை தடியால் அடித்து, அதன் கழுத்தில் காலை வைப்பதும், பின்னர் வன்முறையாக இழுத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவிவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்வின் போது அந்த நபர் சிரித்தபடியே வெளியேறியது கோபத்தை உருவாக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ
இந்த வீடியோ தற்போது Street Dogs of Bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பக்கம், “இது வெறும் வன்கொடுமை இல்லை, இது சாடிஸ்டிக் செயல்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.
நாயின் குடும்பத்தினருக்கு அளித்த தகவல்
பாதிக்கப்பட்ட நாயின் குடும்பத்தினருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான டாக் வாக்கர் தற்போது தப்பியோடிய நிலையில் உள்ளதாகவும், அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்
.
இதையும் படிங்க: உலகத்தை வியக்கவைத்த ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும் செயற்கை ரத்தம்! மருத்துவ உலகின் சாதனை!