நட்பால் நண்பருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது! விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா அதிரடி கருத்து!
ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.. மனைவி, 3 மகள்கள் கொலை.. தந்தை தலைமறைவு!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரின் கர்தானி பகுதியில் உள்ள கோவிந்த் வாடிகாவில் வசித்து வந்த ராகுல் ஜா என்பவர், தனது மனைவி கீதா ஜா மற்றும் மகள்கள் நந்தினி, ராதிகா, கௌரி ஆகியோரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த மூன்று மகள்களுக்கும் 17 முதல் 23 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, சிமெண்ட் கட்டையால் அவர்களது தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைச் சம்பவத்துக்குப் பிறகு, வழக்கம்போல் பால் வாங்கியதாகக் கூறப்படும் ராகுல் ஜா, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!
இந்தச் சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. கொலை நடைபெறுவதற்கு முன்பு, சுமார் 85 வயதான தனது தந்தைக்கு ராகுல் ஜா காலை 7 மணியளவில் தேநீர் தயாரித்துக் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
காலை 10 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான உறுதியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இருப்பினும், குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாக சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள ராகுல் ஜாவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சிசிடிவி வைத்ததால் அதிருப்தி.. மாமனாரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மருமகள்!