பற்றி எரியும் இ-ஸ்கூட்டர்.. தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி... வெடித்துவிடும் - எச்சரிக்கை.!

பற்றி எரியும் இ-ஸ்கூட்டர்.. தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி... வெடித்துவிடும் - எச்சரிக்கை.!


E Scooter Fire Issue

இ-ஸ்கூட்டர் விற்பனை தொடங்கியதில் இருந்து பெட்ரோலினால் ஏற்படும் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கங்கே இ-ஸ்கூட்டர் பேட்டரி தீப்பிடித்து விபத்துகள் ஏற்படுவது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இ-ஸ்கூட்டரில் பற்றிய தீயினை அணைக்க இளைஞர் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சி தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கு? என்ற விவரம் இல்லை. இதுகுறித்து வல்லுநர்கள் தெரிவிக்கையில் பேட்டரி வாகனத்தில் தண்ணீர் பேராபத்து என்று கூறுகின்றனர்.

அதாவது, இ-ஸ்கூட்டர் பேட்டரி தீப்பற்றினால், அதனை தண்ணீர் ஊற்றி அணைக்கும் சமயத்தில் நியூட்ரின் எலக்ட்ரான் (+-) இணைத்து பேட்டரி வெடிக்கும் ஆபத்து அதிகமாகிவிடும். முடிந்தளவு பேட்டரியை தனியாக எடுக்க முயற்சிக்க வேண்டும். அது வாகனத்தை காப்பாற்றும். இயலாத பட்சத்தில் மண் கொண்டு அணைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

Watch Video Click Here: https://www.facebook.com/100044636349208/videos/1287715345344761/