பாவம்.. இப்படியா பன்றது! அலட்சியத்தில் அறுவைசிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள்! கதறி துடிக்கும் நோயாளி! விழுப்புரத்தில் பரபரப்பு..



wrong-leg-surgery-villupuram

விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் தங்கம்மாள் தம்பதியினர், 2008 ஆம் ஆண்டு திருமணமாகி, தற்போது இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மாரிமுத்து, ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகின்றார்.

காலில் வீக்கம் ஏற்பட்ட நிலை

சமீபகாலமாக, மாரிமுத்துவின் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு, தீராத வலியால் அவதிப்பட்ட அவர், கடந்த 30ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர்.

அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களின் ஆலோசனை

ஸ்கேன் முடிவில், வலது காலில் இரு இடங்களில் ஜவ்வு கிழிவு ஏற்பட்டிருப்பதால், அறுவை சிகிச்சை அவசியம் என்று மருத்துவர்கள் கூறினர். அதன்படி, நேற்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதையும் படிங்க: காதல் திருமணம்! வரதட்சணையாக சொந்த வீடு! கணவனுக்கு வேலை இல்லை! திடீரென பெண் செய்த அதிர்ச்சி செயல்! குமரியில் பரபரப்பு...

தவறான அறுவை சிகிச்சை நிகழ்ந்த அதிர்ச்சி

அறுவை சிகிச்சைக்கு பின் கண் விழித்த மாரிமுத்து, தனது வலது காலுக்குப் பதிலாக இடது கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்க, அவர்கள் பதில் கூற முடியாமல் நின்றனர்.

உறவினர்களின் எதிர்ப்பு மற்றும் காவல்துறையின் நடவடிக்கை

மாரிமுத்துவின் அழுகுரலை கேட்டு உள்ளே சென்ற உறவினர்கள், உண்மை நிலையை அறிந்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறு செய்ததை மருத்துவர்கள் ஒப்புக்கொண்டு, 10 நாட்களில் குணமாகிவிடும் எனவும், வலது காலில் வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் கூறினர்.

இந்நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

இதையும் படிங்க: பள்ளிக்குச் செல்கிறேன் என கூறிவிட்டு சென்ற 12ஆம் வகுப்பு மாணவன்! மாலையில் மாணவனுக்கு நடந்த பகீர் சம்பவம்! ஈரோட்டில் பரபரப்பு...