பள்ளிக்குச் செல்கிறேன் என கூறிவிட்டு சென்ற 12ஆம் வகுப்பு மாணவன்! மாலையில் மாணவனுக்கு நடந்த பகீர் சம்பவம்! ஈரோட்டில் பரபரப்பு...

ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் ஒரு தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். அவருக்கு சத்யா என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
17 வயதான ஆதித்யா, அருகிலுள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் செல்கிறேன் என கூறி வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில், பள்ளிக்கு சென்றதாக எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது. அதே நாள் மாலை, மயங்கி கிடந்த ஆதித்யா சாதாரண உடையுடன் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் மாணவன் உயிரிழந்ததாக உறுதி
மருத்துவ பரிசோதனையில், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டதோடு, தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் மேற்கொண்ட விசாரணையில், ஆதித்யாவை சில மாணவர்கள் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தை கலங்க வைத்த புதுப்பெண் ரிதன்யாவின் மரணம்! புது காரில் கடைசியாக சிரித்த முகத்துடன் சென்ற ரிதன்யா! நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..
முன்னதாக, ஆதித்யா தங்கள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியுடன் பேசுவதை நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும், தொடர்ந்து பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் மாணவர்கள் கோபத்தில் அடித்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள்
இச்சம்பவத்தில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வீடியோவில் பத்து பேர் தாக்கியிருப்பது தெரியவந்ததால், மற்ற மாணவர்களையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் விசாரணைக்கு வரவழைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மாணவனின் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி
இந்த நிலைமையில், சிறுவனின் பெற்றோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முழுமையான விசாரணை தேவை எனவும் வலியுறுத்திய போது, தீக்குளிக்க முயற்சித்தனர். ஆனால், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையால் அவர்கள் தடுக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையின் பின்னர் மாணவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முக்கியமாக, இது வெறும் இரு மாணவர்களுடன் மட்டுமா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான நியாயம் கிடைக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்திய நிலையில், இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரவு நேர ரோந்து முடிந்து காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணிக்கு ஓய்வெடுக்க சென்ற எஸ்எஸ்ஐ! அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்...