இரவு நேர ரோந்து முடிந்து காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணிக்கு ஓய்வெடுக்க சென்ற எஸ்எஸ்ஐ! அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்...

நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல் பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி காமாட்சி, பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ பதவியில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு விஜய ரதீஷ் மற்றும் ஹாசினியா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இரவு நேர ரோந்து பணிக்குச் சென்ற காமாட்சி, வேலை முடித்து இரவு 2 மணிக்கு காவல் நிலையத்திற்கு திரும்பி, ஓய்வறைக்கு சென்று தூங்க சென்றுள்ளார். ஆனால், காலை நேரம் ஆகிவிட்டும் அவர் வெளியே வராததை கவனித்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கதவை உடைத்து பார்த்த போலீசார் அதிர்ச்சி
கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது காமாட்சி மயங்கி கிடந்ததை கவனித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், காமாட்சியின் உயிரிழப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு சிறுவன்! மூச்சுத்திணறி உயிரிழப்பு! சிவகங்கையில் பரபரப்பு...
மரணத்திற்கான என்ன காரணம்
மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தாலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் டிஎஸ்பி விஜயகுமார்ருடன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் பிறகே மரணத்திற்கான நிச்சயமான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணை
இந்த சம்பவம் பேளுக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தைச் சுற்றியுள்ள விசாரணை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: அர்ச்சகர்களின் ஆபாச நடனம்! ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பெண்கள் மீது விபூதிதூவி விளையாட்டு! வைரலாகும் சர்ச்சை வீடியோ...