பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு சிறுவன்! மூச்சுத்திணறி உயிரிழப்பு! சிவகங்கையில் பரபரப்பு...



sivagangai-student-dies-trapped-in-locked-car

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த அஸ்வின் 7 வயது சிறுவன், பள்ளிக்குச் செல்லும் போது காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக பள்ளி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் அஸ்வின், சம்பந்தப்பட்ட நாளில் தனிப்பட்ட கார் மூலம் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மாணவன் உள்ளே இருப்பதை மறந்து விட்டதால், காரை வெளியே பூட்டி விட்டனர்.

காருக்குள் மூச்சுத்திணறி மாணவன் உயிரிழப்பு

வெப்பம் அதிகமாக இருந்த அந்த நாளில், காருக்குள் சில மணிநேரமாக மூடிய நிலையில் சிறுவன் தவித்துள்ளார். மூச்சு திணறி, எந்தவிதமான உதவியும் பெற முடியாமல், அஸ்வின் உயிரிழந்தார் என்பது கண்களை கலங்கச் செய்கிறது.பா

இதையும் படிங்க: அர்ச்சகர்களின் ஆபாச நடனம்! ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பெண்கள் மீது விபூதிதூவி விளையாட்டு! வைரலாகும் சர்ச்சை வீடியோ...

பள்ளியில் பாதுகாப்பு இல்லாததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளித் தாளாளரின் கணவர் சங்கரநாராயணன், அவருடைய மகன் மகேஷ் குமார், மற்றும் கார் ஓட்டுனர் ஜான் பீட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

 

இதையும் படிங்க: சார்ஜ் கொஞ்சம் போடணும் மேடம்! வீட்டிற்குள் வந்து பெண்ணிடம் அத்துமீறிய டெலிவரி பாய்! அடுத்து நடந்த திகிலூட்டும் செயல்! சென்னையில பரபரப்பு....