சார்ஜ் கொஞ்சம் போடணும் மேடம்! வீட்டிற்குள் வந்து பெண்ணிடம் அத்துமீறிய டெலிவரி பாய்! அடுத்து நடந்த திகிலூட்டும் செயல்! சென்னையில பரபரப்பு....



grocery-delivery-harassment-madipakkam

செப்டோ என்ற மளிகை டெலிவரி நிறுவனம் மூலம் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு பெண் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் ஆர்டர் செய்தார். அந்த ஆர்டரை டெலிவரி செய்ய கோபிநாத் என்ற ஊழியர் வரவழைக்கப்பட்டார்.

வீட்டில் தனியாக இருந்த பெண் அனுமதி வழங்கினார்

பெண் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த கோபிநாத், தனது செல்போனை சார்ஜ் செய்ய அனுமதி கேட்டார். குற்றமற்ற நம்பிக்கையுடன் அந்த பெண் வீட்டுக்குள் அவரை அனுமதித்தார்.

பாலியல் தொந்தரவு மற்றும் அதிர்ச்சி சம்பவம்

சிறிது நேரத்திலேயே, கோபிநாத் அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார். அதனால் பயந்துபோன பெண் கூச்சலிட்டார். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கோபிநாத்தை பிடித்து அடித்து, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: Tourism: கொல்லிமலை போக விரும்புறீர்களா? அப்போ கொல்லிமலையின் சிறப்புகள் தெரியாமல் போகாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க...

போலீசாரின் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண் சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனத்திற்கும் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்! வீட்டிற்கு போனதும் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்!