பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்! வீட்டிற்கு போனதும் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பகுதியில் உள்ள பெங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. அவருடைய மனைவி ஆதிலட்சுமி. இவர்கள் தம்பதிக்கு கவின் குமார் மற்றும் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கவின் குமார், ஒரு தனியார் பள்ளியில் பதினிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
புகையிலை பழக்கம் பற்றிய தகவல் பெற்றோரிடம் தெரிவிப்பு
சமீப காலமாக, போதைப்பொருள் பழக்கம் கொண்ட சக மாணவர்களுடன் கவின் குமார் பழகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் கொண்டதாக பள்ளி ஆசிரியர்கள் கவனித்தனர். ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்து இந்த விவரங்களை சொல்லினர்.
அப்போது, கவின் குமார், “இனிமேல் இப்படிப் பழக்கங்களில் ஈடுபடமாட்டேன்” என்று எழுத்து மூலம் உறுதி அளித்தார். இதையடுத்து பெற்றோர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென பெற்ற 3 வயது குழந்தை இறந்ததாக கூறிய தாய்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
திடீர் தற்கொலை அதிர்ச்சி
சம்பவம் நடந்த அன்று, குருசாமி வேலைக்கு சென்றிருந்தார். ஆதிலட்சுமி, உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில், கவின் குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தாயின் கண்ணீரும் அக்கம் பக்கத்தவர்களின் பதற்றமும்
வீட்டிற்கு வந்த ஆதிலட்சுமி, தன் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அலறி சத்தம் போட்டார். அப்பொழுது அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து, கவின் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்தவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
போலீசார் விசாரணை
இந்த துயரமான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் தற்கொலை சம்பவம், ஊரிலே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவி உயிரிழப்பு! இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது! இந்தவகை வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு...