பள்ளி மாணவி உயிரிழப்பு! இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது! இந்தவகை வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு...

சென்னை பெரம்பூரில் நிகழ்ந்த லாரி மோதி விபத்தில் பத்து வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்தது, மாநிலமெங்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கமிஷனர் அருண் எடுத்த முக்கிய உத்தரவு
சம்பவத்தின் பின்னணியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதன்படி, விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய வாகனங்கள் குறைந்தது 100 நாட்கள் வரை உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படமாட்டாது.
பள்ளிகள் அருகே கனரக வாகனங்களுக்கு தீவிர நேர கடுப்பாடு
மேலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, காலை 7 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால், போலீசாருக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tourism: கொல்லிமலை போக விரும்புறீர்களா? அப்போ கொல்லிமலையின் சிறப்புகள் தெரியாமல் போகாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க...
லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை
குடிநீர் லாரிகள் மற்றும் பிற கனரக வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பாக வாகனம் இயக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. இது போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாதபடி தற்காலிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.