காட்டு ராஜாவையே ஓடவிட்ட மர்ம உருவம்! தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் நடந்த பகீர் சம்பவம்! வைரலாகும் வீடியோ!
காட்டு ராஜா என அழைக்கப்படும் சிங்கம் கூட சில நேரங்களில் எதிர்பாராத சூழ்நிலையில் பயந்துவிடும் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தாகம் தீர்க்க வந்த சிங்கம்
பொதுவாக சிங்கம் என்றாலே கம்பீரம், வேட்டை, வீரம் என நினைவுக்கு வரும். ஆனால் இந்த வீடியோவில், தாகத்துடன் காட்டில் தேங்கியிருக்கும் தண்ணீரை பருக ஒரு சிங்கம் நெருங்கி வருகிறது.
சேற்றில் மறைந்த மனிதர்
அதே தண்ணீருக்குள், தலை முதல் கால் வரை சேற்றைப் பூசிக்கொண்டு, பாதி உடல் மூழ்கியபடி ஒரு நபர் பதுங்கியிருக்கிறார். சிங்கம் அருகே வந்த அந்த நொடியில், அவர் திடீரென எழுந்து நிற்கிறார்.
இதையும் படிங்க: அட... இப்படி ஆச்சே! கண்டாமிருகத்தை விடாமல் துரத்தி பின்தொடர்ந்த சிறுத்தை! வெளியேறிய வாயு.... அடுத்து நடந்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ..!!!
பயத்தில் ஓடிய காட்டு ராஜா
எதிர்பாராத இந்த ‘பேய்த் தோற்றத்தை’ பார்த்த சிங்கம் ஒரு கணம் நிலைகுலைந்து, பின்னர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், "சிங்கத்துக்கே பயம் வரும்னு இப்பதான் தெரியுது" என கிண்டலடித்து வருகின்றனர்.
"எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு தெரியலையே" என சிங்கமே நினைத்திருக்கும் போல என பலரும் கருத்து தெரிவித்து, இந்த சிங்கம் பயந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
இவ்வாறு இயற்கையின் அரசனாக கருதப்படும் சிங்கமே மனிதரின் திடீர் செயலால் அச்சுறுத்தப்பட்ட இந்த சம்பவம், வனவிலங்குகளின் நடத்தை குறித்து புதிய பார்வையை அளிப்பதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இதனால் இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.