43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
கல்குவாரியில் கிடந்த 10-ம் வகுப்பு மாணவி சடலம்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த அடுத்தடுத்த அதிர்ச்சி! DNA பரிசோதனை மூலம் திடுக்கிடும் உண்மை!
ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன பள்ளி மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கல் குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வெளிவந்த தகவல்கள் சமூகத்தை உலுக்கியுள்ளது.
கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
பிடாசர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி, பல வாரங்களுக்குப் பிறகு ஒரு கல் குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது கழுத்தில் தாவணியால் நெரிக்கப்பட்ட தடயங்களும், தலையில் பலத்த காயங்களும் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பெற்றோர் ‘வயிற்று உப்புசம்’ என தவறாக கருதியிருந்ததும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
DNA பரிசோதனையில் குற்றவாளி உறுதி
காவல்துறையினர் நடத்திய DNA பரிசோதனை மூலம், 40 வயதுடைய சுனில் மேக்வால் என்பவரே கர்ப்பத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கர்ப்பம் உறுதியானதும் சமூக அவமானத்திற்கு பயந்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ள இந்த சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருமகளின் தலையை துண்டித்த மாமியார்.... தலை ஒரு இடத்திலும், உடலின் மற்ற பாகங்கள் வேறு இடத்திலும்...! கொடூர கொலையின் பரபரப்பு வாக்குமூலம்!