22 வயது பெண்ணிடம் 5 வருஷமா லிவ் - இன் உறவில் 50 வயது நபர்! திடீரென கர்ப்பமான பெண்ணின் உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்! திடுக்கிடும் பின்னணி..!!!



thane-woman-murder-suitcase-case

மகாராஷ்டிராவில் நடைபெற்ற  பெண்கொடுமை சம்பவம் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லிவ்-இன் உறவை மையமாகக் கொண்டு உருவான தகராறு, இறுதியில் உயிரைக் காவுகொண்ட கொடூரமான கொலைச் சம்பவம் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

தானே அருகே உள்ள தேசாய் கிராமத்தில் ஒரு சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதும், போலீஸார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். பின்னர், மணிக்கட்டில் இருந்த 'BVS' என்ற பச்சைக் குத்து அடையாளத்தின் மூலம், அவர் பிரியங்கா விஸ்வகர்மா (22) என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: திடீரென காணாமல் போன கணவன்! இறுதியில் மனைவியும் கொழுந்தனும் சேர்ந்து போட்ட மாஸ்டர் பிளான்! திடுக்கிடும் சம்பவம்! !

5 ஆண்டுகளாக லிவ்-இன் உறவு

பிரியங்கா கடந்த 5 ஆண்டுகளாக 50 வயதான வினோத் சீனிவாஸ் உடன் திருமணம் இல்லாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், பிரியங்கா 3 மாத கர்ப்பிணியாக இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் சந்தேகம் வினோத் மீது சுட்டிக்காட்டியதால், அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, நவம்பர் 21 ஆம் தேதி இரவு ஏற்பட்ட சண்டையின் போது, ஆத்திரத்தில் பிரியங்காவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

கொடூர முயற்சி – சடலத்தை சூட்கேஸில் திணித்து வீச்சு

அடுத்த நாள் இரவு அழுகத் தொடங்கிய உடலை சூட்கேஸில் நெருக்கி அடைத்து, கழிமுகப் பகுதியில் எறிந்துவிட்டதாக வினோத் தெரிவித்துள்ளார். பின்னர், தன்னை அறியாதவனாக நடித்து வழக்கமான வாழ்க்கையை தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த மகளிர் பாதுகாப்பு கேள்விகளை எழுப்பும் சம்பவம், லிவ்-இன் உறவுகளில் நிகழும் வன்முறைகளை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: வயலில் நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் சடலம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! திடுக்கிடும் சம்பவம்!