தங்கம் விலை.. ஏற்றதால்.. மூதாட்டி கொலை.. பெண்களே உஷார்.. சர்க்கரை தூவி கொலையை மறைக்க முயன்ற காதல் ஜோடி கைது.!



Lovers Arrested After Murder for Gold in Sivaganga

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற அதிர்ச்சி சம்பவத்தில், நகைக்காக பெண்ணை கொலை செய்து உடலின் மீது சர்க்கரை தூவி தடயங்களை மறைக்க முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிங்கம்புணரி அருகே வசித்து வந்த மாதவன்– பூச்சியம்மாள் தம்பதியின் மகனும் மகளும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று மாலை, உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பேச்சியம்மாள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது கணவர் மாதவன், உறவினர்களுடன் இணைந்து பல இடங்களில் தேடியுள்ளார். இந்த நிலையில், சூரக்குடி பகுதியில் உள்ள கால்வாய் அருகே வேப்பமரத்துக்கு அருகில் பூச்சியம்மாளின் உடல் பிணமாக கிடந்தது. உடலைச் சுற்றி சர்க்கரை கொட்டப்பட்டிருந்ததை பார்த்து, வேப்பங்கொட்டை பொறுக்கச் சென்ற கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிவகங்கையில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! மாலையில் ஆடுகள் மட்டும் திரும்பிய நிலையில்.... மாணவியை தேடிய பெற்றோர்கள்! ஊருணித் தண்ணீரில் கண்ட அதிர்ச்சி...!!!

Sivaganga

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய், பூச்சியம்மாளின் உறவினரான சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்கு சென்றதையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது காதலன் சரவணனுடன் சேர்ந்து பூச்சியம்மாள் அணிந்திருந்த சுமார் பத்தரை பவுன் நகையை பறிப்பதற்காக அவரை கொலை செய்ததாக சாமுண்டீஸ்வரி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், உடலை எறும்புகள் மற்றும் பூச்சிகள் அரித்துவிடும் என்ற நோக்கில் உடலின் மீது சர்க்கரை தூவியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் என்னவென்றால் உறவினர்கள் மூதாட்டியை தேடிய போது சாமுண்டீஸ்வரியும், சரவணனும் சேர்ந்து தேடியுள்ளனர் என்பது தான்.

இதையும் படிங்க: அண்ணி அனுப்பிய ரகசிய மெசேஜ்..! பலநாள் நினைத்தது ஒரு நாள் நடந்தது என ஆசையோடு ஓடிய இளைஞர்க்கு காத்திருந்த அதிர்ச்சி..! நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்..!!!