"அக்கா மட்டும் போதாது தங்கச்சியும் வேணும்..." குடிகார மாமாவை கொலை செய்த மைத்துனன்.!!



young-man-murdered-brother-in-law-over-family-dispute

கொழுந்தியா மீது ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவரை மைத்துனன் வெறித்தனமாக   வெட்டிகொன்ற சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை, ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ் பகுதியை சேர்ந்த கணபதி(30). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பையூர் எம்ஜிஆர் பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் இவர் மனைவிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் மனைவி குழந்தைகளை விட்டு வேறொருவருடன் சென்று விட்டார். குழந்தைகளை மோனிஷவின் தம்பி  மகேஸ்வரன் வளர்த்து வந்துள்ளார்.

tamilnadu

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ஆரணியையடுத்த, மொழுகம் பூண்டி கிராமத்தில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த போலீசார் விசாரணையில், குழந்தைகளை பார்க்க வந்த இடத்தில் கணேசன், மோனிஷவின் மற்றொரு சகோதரியுடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதையறிந்து கொழுந்தியாளை தனக்கே திருமணம் செய்து கொடுக்கும்படி குடித்து விட்டு தகராறு செய்துள்ளார்.

இதையும் படிங்க: "சரக்கடிக்க காசு குடுயா..." போதையில் எகிறிய மகன்.!! கல்லைப் போட்டு கதையை முடித்த தந்தை.!!

இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன் மது போதையிலிருந்த அவரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் மகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!