AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"சரக்கடிக்க காசு குடுயா..." போதையில் எகிறிய மகன்.!! கல்லைப் போட்டு கதையை முடித்த தந்தை.!!
திருப்பூர் மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 60 வயது நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் கள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். 60 வயதான அவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் குட்டியப்பன் (25). திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். கன்னியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக குட்டியப்பன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து குட்டியபனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற சோகத்திலிருந்த குட்டியப்பன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்த குட்டியப்பன் மேலும் மது அருந்துவதற்காக தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக கண்ணப்பன் மற்றும் குட்டியப்பனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செல்லூரில் பயங்கரம்... போதையில் எகிறிய மகன்.!! கிரைண்டர் கல்லால் அடித்து கொலை.!!
மகன் மற்றும் தந்தையிடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணப்பன் அங்கு கிடந்த கல்லை எடுத்து தனது மகனை கடுமையாக தலையில் தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலில் நிலை குலைந்து சரிந்த குட்டியப்பனை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குட்டியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குட்டியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனையடுத்து மகனை கொலை செய்த கண்ணப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... தாய் அடித்து கொலை.!! மகன் கைது.!!