நல்லவன் போல பேசி கொடுமை.. பள்ளி மாணவிக்கு வீடுபுகுந்து தொல்லை.. திடுக்கிடவைக்கும் பயங்கரம்.!
பள்ளி மாணவி நடனமாடுவதை படம்பிடித்து பாராட்டி பேசிய வீட்டு உரிமையாளர், பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
பக்கத்து வீடு நம்பிக்கை:
Coimbatore News Today: கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சில வீடுகளும் உள்ள நிலையில், அதனை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் 15 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஒரே வளாகத்தில் அனைவரும் வசித்து வந்ததால், அன்புடன் அனைவரும் பழகி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
நல்ல நபராக பேச்சு:
இதனிடையே, ரவிக்குமாரின் குடும்பத்துடன் மாணவி இயல்பாக பழகி வந்துள்ளார். ரவிக்குமாரும் சிறுமியிடம் நகைச்சுவையாக பேசி நல்ல நபராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும், மாணவிக்கு சினிமா பாடலுக்கு நடனமாட பிடிக்கும் என்பதால், ரவிக்குமாரும் மாணவியுடன் சேர்ந்து பேசி நடனமாடி இருக்கிறார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
பாலியல் தொல்லை:
இந்த விஷயத்தை பயன்படுத்தி ரவிக்குமார் சிறுமியிடம் தகாத முறையில் நடக்க திட்டமிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே இதற்காக திட்டமிட்ட நிலையில், அடிக்கடி வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக மாணவியிடம் அத்துமீறல் தொடர்ந்த நிலையில், மாணவியை மிரட்டியும் இருக்கிறார்.
போக்ஸோவில் கைது:
சம்பவத்தன்று இரவில் சிறுமி சோர்வுடன், கழுத்து வலியுடன் அவதிப்பட்டுள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரர் காரணம் கேட்டபோது, ரவிக்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதை மாணவி கண்ணீருடன் விவரித்து இருக்கிறார். இதனையடுத்து, கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ரவிக்குமாரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!