மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்.! தட்டி தூக்கிய போலீசார்.!

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்.! தட்டி தூக்கிய போலீசார்.!


young man arrest for rape case

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் காட்டுப்பகுதியில் முதியவர் ஒருவர் தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருடைய மூத்த மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தந்தையுடன் மாடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று வழக்கம் போல் முதியவர் மற்றும் அவரது மகள் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டு பகுதிக்கு ஒட்டி சென்றுள்ளனர். அங்கு மகள் ஒரு பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் தந்தை இல்லாத சமயம் அங்கு வந்த சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற 26 வயது நிரம்பிய வாலிபர், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்ட முதியவர் சம்பவ இடத்துக்கு வந்தார். இதனையறிந்த கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

arrest

இதனையடுத்து காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.