தமிழகத்தில் போலீஸ் பணிக்கு இன்று எழுத்து தேர்வு.! யாரும் மிஸ் பண்ணீடாதீங்க.!



written-exam-for-police

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு இந்த ஆண்டு மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 (ஆண்கள்), 3 ஆயிரத்து 99(பெண்கள், திருநங்கையர்), சிறப்பு காவல்படை பிரிவில் 6 ஆயிரத்து 545, சிறைத்துறைக்கு 119 (ஆண்கள்-112, பெண்கள்-7), தீயணைப்புத்துறைக்கு 458 (ஆண்கள்) என 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை போலீசார் தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு இன்று (13.12.2020) நடக்கிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 35 மையங்களில் 29 ஆயிரத்து 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நேரம் காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணிவரை ஆகும். தேர்வு கண்காணிப்பு பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ சார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

police exam

தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 8:30 மணி முதல் அனுமதிக்கப்படுவர். தேர்வறைக்குள் செல் போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது. தேர்வு எழுத தேர்வு அட்டை கொண்டு வரவேண்டும். ஹால்டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை ஒட்டி அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.