தமிழகம்

என் சாவிற்கு அவர்தான் காரணம்! திடீரென நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்! ஏன்? நடந்தது என்ன?

Summary:

என் சாவிற்கு அவர்தான் காரணம்! திடீரென நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்! ஏன்?நடந்தது என்ன?

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிறைந்த பர்ஜானா என்ற பெண் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு பிரபல நடிகரான அஜித் சிகிச்சைக்காக சென்ற நிலையில், ஆர்வக்கோளாறில் அந்த பெண் அஜித்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அதனை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலானது 

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அப்பெண்ணை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து தெரியவந்த நிலையில் அஜித் தரப்பினர் கூறியதை தொடர்ந்து பர்ஜானாவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதாகவும், பின்னர் சில காரணங்களால் மறுபடியும் அப்பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு மீண்டும் பணி கிடைக்க அஜித் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து , அவரை சந்திக்க வேண்டும் என சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டின் முன்பு திடீரென பர்ஜானா தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அப்பெண் தனது சாவிற்கு அஜித்தான் காரணம் என புலம்பியவாறே சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement