ஓடும் பேருந்தில் இயற்கை உபாதையால் தவித்த இளம் பெண்! பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுநர். பின்பு நடந்தது.

Women jumped from bus in viruthunagar


Women jumped from bus in viruthunagar

மனிதர்களிடத்தில் உள்ள மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டே வருகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த பாண்டியம்மாளுக்கு திடீரென இயற்கை உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு கேட்டுள்ளார் பாண்டியம்மாள். பேருந்தை நிறுத்த மறுத்துள்ளார் பேருந்து நடத்துனர்.

இதனால் அடுத்த கணமே பேருந்தில் இருந்து வெளியே குதித்துள்ளார் பாண்டியம்மாள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் பாண்டியம்மாளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டியம்மாள், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இயற்கை உபாதை என்பது மனிதனால் சற்றும் பொறுத்து கொள்ள முடியாத விஷயங்களில் ஓன்று. அதைக்கூட புரிந்துகொள்ளாமல் பேருந்தை நிறுத்த மறுத்த நடத்துனர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பாண்டியம்மாவின் உறவினர்கள்.