டிவி பார்த்தால் கண்களில் நீர் வருகிறதா?.. சாதாரணமாக நினைக்காதீங்க.. கண்கள் சொல்லும் எச்சரிக்கை.!
நீண்ட நேரம் திரையை நோக்கி பார்ப்பது கண்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றளவில் டிவி பார்க்கும் பலரின் கண்களிலும் திடீரென நீர் வடிவதாக தெரிவிக்கின்றனர். இது கண்கள் சொல்லும் எச்சரிக்கை பாடம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் கண் சிமிட்டாமல் டிவி பார்ப்பதால் கண் சிமிட்டும் செயல்கள் குறைகிறது. இதனால் கண்களில் இருக்கும் நீர் குறைந்து வறட்சியை சரி செய்ய தண்ணீர் தானாகவே வெளிப்படுகிறது.
டிவி பார்ப்போர் கவனம்:
டிவியில் இருந்து வரும் நீல நிற ஒலி கண் சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் கண்களில் நீர் வடிவு பிரச்சனை ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஏசி அறையில் இருந்து டிவி பார்ப்பது கண்கள் மற்றும் காற்றோட்டம் வறண்டு போக செய்யும். இதனால் கண்களில் அதிக நீர் வரும் வாய்ப்புகள் ஏற்படும்.
இதையும் படிங்க: "நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!

கண்கள் பாதிப்பு:
டிவியின் அருகில் தூசி, செல்லப்பிராணி முடி இருந்தால் கண்களில் எளிதில் நீர் வரலாம். டிவியை உயரமான இடத்தில் வைத்து கண்களை விரித்துப் பார்க்கும் சூழ்நிலை வந்தாலும் கண்களில் வறட்சித் தன்மை உண்டாகும். டிவியை தொடர்ந்து பார்ப்பதால் கண் தசைகள் சோர்வடையும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால் கண்களின் புத்துணர்ச்சியை அதிகரிக்க தண்ணீரை வெளியிடும்.
ஓய்வு அவசியம்:
இதனால் அவ்வப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி கண் சிமிட்டுவது, திரையின் பிரைட்னஸை குறைத்து வைத்திருப்பது அல்லது சரியான அளவு வைத்து பயன்படுத்துவது, 20 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வளிப்பது நல்லது.
இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!