AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!
எலிக்கடியை அலட்சியம் செய்தால் எலி காய்ச்சல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நகர்புறங்களில் தற்போது எலிகளின் தொல்லை அதிகமாகி வரும் நிலையில், இரவு நேரத்தில் தூங்கும் மனிதர்களை எலிகள் கடிக்கும் செயலும் நடந்து வருகின்றன. இந்த பிரச்சனை நகரங்கள், கிராமங்கள் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து வருகிறது. பலரும் எலி கடித்ததை அலட்சியமாக எண்ணியும் செயல்படுகின்றனர்.
எலி கடித்த பின் உடலில் நடக்கும் மாற்றம்:
அதனை கை கழுவி கடந்து செல்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எலிகளின் உமிழ்நீர் மற்றும் பற்களில் இருக்கும் பாக்டீரியா நமது ரத்தத்தில் கலக்கும் பட்சத்தில் எலி காய்ச்சல் ஏற்படும். எலிக்கடியினை நாம் கவனிக்காத பட்சத்தில் கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, இதய பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு போன்றவையும் ஏற்படலாம்.
இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!

எலி கடித்தவுடன் செய்யவேண்டியது என்ன?
எலிகள் கடித்தால் அந்த காயத்தை முதலில் ஓடும் நீரில் 10 முதல் 15 நிமிடம் சோப்பு போட்டு தேய்த்து நன்கு கழுவ வேண்டும். அதேபோல காயத்தில் மஞ்சள், எண்ணெய், காபித்தூள் போன்றவை வைக்காமல் அயோடின் ஆன்டிசெப்டிக் மருந்துகளை தடவி பேண்டேஜ் போடலாம். ரத்தம் கசியும் பட்சத்தில் அதனை நிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்:
காயம் சிறியதாக இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஊசி அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த செயலை செய்யாத பட்சத்தில் எலி கடித்த இடம் சிவந்து வீங்கி வைரஸ் தொற்று ஏற்படும். இது பிற உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.