Bank Job: பட்டதாரிகளுக்கு அற்புத வாய்ப்பு.. ஐடிபிஐ வங்கியில் 1300 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.!



IDBI Bank Recruitment 2026: 1300 Vacancies Announced for Graduates

ஐடிபிஐ வங்கி ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்காக 1300 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல முன்னணி வங்கி நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 1300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இளைஞர்கள் விண்ணப்பித்து பலன் பெறலாம்.

பணி தொடர்பான விபரம்:

நிறுவனம் : ஐடிபிஐ வங்கி 
காலி பணியிடங்கள் : 1300 
பணி : ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் - 1100, அசிஸ்டன்ட் மேனேஜர் (ஏ கிரேடு) - 200
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு வங்கி, நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வேண்டும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை. 
வயதுவரம்பு : 21 வயது முதல் 30 வயது வரை 
சம்பளம் : மாதம் ரூ.6.14 லட்சம் முதல் 6.50 இலட்சம் வரை 
உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ.60,000 வரை 
விண்ணப்பிக்கும் முறை : www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-03-2026

இதையும் படிங்க: SBI Bank Job: எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் வேலைவாய்ப்பு.. விபரம் இதோ.!

இதையும் படிங்க: பெண்களுக்கு தேர்வின்றி சூப்பர் வேலை.. தமிழகம் முழுவதும் 2,147 செவிலியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.!