பேஸ்புக் பழக்கம்.. 78 வயது முதியவரின் அந்தரங்க வீடியோவை குடும்பத்திற்கு அனுப்பிவைத்த இளம்பெண்.!



Video Call Trap: Young Woman Blackmails 78-Year-Old Man, Extorts ₹2 Lakh 

சமூக ஊடகத்தில் அறிமுகமான இளம்பெண் வீடியோ கால் மூலம் முதியவரை சிக்கவைத்து ரூ.2 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் வசித்து வருபவர் 78 வயது முதியவர். இவருக்கு முகநூல் கணக்கு மூலமாக இளம் பெண் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட கால நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படும் நிலையில், பெண் தனது வாட்ஸ்அப் எண்ணை முதியவருக்கு கொடுத்து வீடியோ காலில் வர சொல்லியுள்ளார். 

அந்தரங்க வீடியோ:

இதனை தொடர்ந்து தனிப்பட்ட தகவல்களை இருவரும் வீடியோ காலில் பகிர்ந்த பின் அதனை வீடியோவாக பதிவு செய்த பெண்மணி முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். தொடக்கத்தில் பயந்து போன முதியவர் ரூ.2 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். மேலும் பணம் கேட்டு பெண் மிரட்டிய நிலையில், முதியவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரின் அந்தரங்க வீடியோக்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதையும் படிங்க: "கள்ளத்தொடர்பு சந்தேகத்தில் புது பெண் கொலை..." கணவன் வெறி செயல்.!!

Video Call Trap

பணம் கேட்டு மிரட்டல்:

இதனால் அதிர்ந்த குடும்பத்தினர் முதியவரிடம் விசாரித்த போது பணத்தை இழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முதியவரின் மருமகள் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் மற்றும் வங்கி கணக்கை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கும் மதம் மாறனும்.. கணவனை விட்டு ஓடிய 28 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!