வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
"கள்ளத்தொடர்பு சந்தேகத்தில் புது பெண் கொலை..." கணவன் வெறி செயல்.!!
பீகார் மாநிலத்தில் கள்ளத்தொடர்பிருப்பதாக சந்தேகமடைந்த கணவன், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புனிதா. 21 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளிலிருந்து கணவன் வீட்டார் புனிதாவிடம் பணம் மற்றும் நகை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். மேலும் திருமணத்தின் போது குறைவான வரதட்சணை கொடுத்ததாக குற்றஞ்சாட்டிய அவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டும் மணப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் புனிதாவிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவன், அவரை அடித்து கொடுமை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று புனிதா வீட்டில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் புனிதாவின் கணவர் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலே இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!