"மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்த இளம் பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் நான்தட் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவாணி. இந்தப் பெண்ணிற்கு கடந்த வருடம் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு லகான் பண்டாரே என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் தனிமையில் இருக்கும்போது தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்திருக்கிறார் சஞ்சீவாணி.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று சஞ்சீவாணி மற்றும் அவரது கள்ளக்காதலன் தனிமையில் இருப்பதை பார்த்த சஞ்சீவாணியின் மாமியார் இது தொடர்பாக அவரது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சஞ்சீவாணியின் தந்தை மற்றும் உறவினர்கள் கள்ளக்காதல் ஜோடி இருவரையும் தாக்கி அவர்களது கை கால்களை கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்ற சஞ்சீவ்வாணியின் தந்தை, தனது மகள் மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
இதையும் படிங்க: "என் மனைவி கேக்குதா உனக்கு.." கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.!! கணவன் எடுத்த கொடூர முடிவு.!!
இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம இடத்திற்கு சென்று கிணற்றில் வீசப்பட்ட 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலில் இருந்த மகளை, தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் கொடூரம்... 20 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு.!! மாமியாரை போட்டு தள்ளிய மருமகள்.!!