கள்ளக்காதல் கொடூரம்... 20 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு.!! மாமியாரை போட்டு தள்ளிய மருமகள்.!!



woman-murdered-mother-in-law-planned-executed-with-love

பெங்களூரு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த பெண்ணின் மருமகள் அஸ்வினி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆஞ்சநேயா ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் அருகேயுள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவருக்கு திருமணமாகி அஸ்வினி(35) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ரமேஷ், அவரது தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது தாய் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும் வீட்டிலிருந்த 20 பவுன் நகையும், 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதனைத் தொடர்ந்து தனது தாயின் இறப்பில் சந்தேகமிருப்பதாக காவல்துறையிடம் புகாரளித்தார்.

India

அவரது புகாரை தொடர்ந்து இறந்த உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் ரமேஷின் தாயார் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது ரமேஷின் மனைவி மீது காவல்துறையின் சந்தேகம் திரும்பியது. இதனையடுத்து ரமேஷின் மனைவி அஸ்வினியிடம் காவல்துறை விசாரணை செய்ததில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் பக்கா ஸ்கெட்ச்.!! கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.!! மகள் வைத்த டிவிஸ்ட்.!!

அஸ்வினிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயா என்ற 26 வயது இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் தனது காதலனை வீட்டிற்கு அழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்திருக்கிறார். வீட்டிலிருந்த நகைகளையும் திருடி கள்ளக்காதலனுக்கு கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அஸ்வினி மற்றும் ஆஞ்சநேயா இடையே உள்ள கள்ளத்தொடர்பை பற்றி அவரது மாமியாருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது. பிறகு சம்பவம் நடந்த தினத்தன்று தனது மாமியாருக்கு ராகி உருண்டையில் தூக்க மாத்திரை மற்றும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததை காவல்துறையிடம் கூறினார் அஸ்வினி. இந்த விசாரணையை தொடர்ந்து அஸ்வினி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆஞ்சநேயாவை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது.

இதையும் படிங்க: "தீபாவளிக்கு வீட்டுக்கு வாயா மஜாவா இருக்கலாம்.." ஓனருடன் கள்ளக்காதல்.!! கணவன் கொலை.!!