புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கள்ளக்காதலனுடன் பக்கா ஸ்கெட்ச்.!! கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.!! மகள் வைத்த டிவிஸ்ட்.!!
கர்நாடக மாநிலத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மகள் கொடுத்த புகாரின் பேரில் தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகம்
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் சந்தோஷ்(47). இவருக்கு திருமணமாகி உமா(42) என்றும் மனைவியும் சஞ்சனா(18) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி சந்தோஷ் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது மனைவி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இறுதி சடங்குகளும் செய்யப்பட்டன. எனினும் தந்தையின் மரணத்தில் அவரது மகள் சஞ்சனாவிற்கு சந்தேகம் இருந்தது.
அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருக்கிறார் சஞ்சனா. அப்போது சந்தோஷ் மரணமடைந்த தினத்தன்று பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் செய்தார் சஞ்சனா. அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் சஞ்சனாவின் தாய் உமா வேறொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.!! 17 வயது சிறுமி கற்பழிப்பு.!!
கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்ட சந்தோஷ்
இந்த விசாரணையில் உமா, தனது கள்ளக்காதலன் ஷோபித் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உமா, சமூக வலைதளம் மூலமாக ஷோபித் என்ற மங்களூரைச் சேர்ந்த நபருடன் பழகி கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த தொடர்பை பற்றி அறிந்த சந்தோஷ் மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் உமா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி இரவு தனது கள்ளக்காதலன் ஷோபித் மற்றும் அவனது நண்பன் துணையுடன் கணவருக்கு மயக்க மருந்து கொடுத்தபின் மூவரும் சேர்ந்து தலையணையால் அழுத்தி சந்தோஷை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து புதைத்த உடலை தோண்டி எடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி கொலை செய்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து உமா அவரது கள்ளக்காதலன் ஷோபித் மற்றும் நண்பர் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: அம்மா எரியுதே.. உடலில் தீப்பற்றி கதறிய சிறுமி.. ஆளரவமில்லா பகுதியில் காதலன் திகில்.. பரிதாப மரணம்.!