புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கொடூரத்தின் உச்சம்... கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.!! 17 வயது சிறுமி கற்பழிப்பு.!!
பெங்களூரு நகரில் தந்தை வட்டிக்கு வாங்கிய தொகையை திருப்பி செலுத்தாததால் 17 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் வட்டி தொழில் செய்யும் 39 வயது நபரை கைது செய்துள்ளனர்.
வட்டிக்கு கடன்
பெங்களூரு நகரின் மாதநாயகனஹள்ளி பகுதியைச் சேர்ந்த நபர் வட்டி தொழில் செய்யும் ரவிக்குமார் என்ற 39 வயது நபரிடம் 70,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். மேலும் அவர் கடன் தொகையையும் வட்டியையும் திருப்பி செலுத்தாமல் தாமதம் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக வட்டிக்கு பணம் கொடுத்த ரவிக்குமார் அந்த நபரிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில் 30,000 ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுத்ததால் அந்த நபரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுத்திருக்கிறார் ரவிக்குமார். மேலும் வட்டி பணத்தை கொடுக்காததால் கடன் வாங்கிய நபரின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் ரவிக்குமார். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: அம்மா எரியுதே.. உடலில் தீப்பற்றி கதறிய சிறுமி.. ஆளரவமில்லா பகுதியில் காதலன் திகில்.. பரிதாப மரணம்.!
பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் பணம் கேட்டு வந்த ரவிக்குமார் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளி ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொகையை திரும்ப கொடுக்காததால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பெண்கள் பெட்டியில் உனக்கென்ன வேலை? பளார் கொடுத்து அனுப்பப்பட்ட ஆண்கள்.. டெல்லியில் சம்பவம்.!