Parasakthi Trailer: 'என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' - தீ பரவ வெளியானது 'பராசக்தி' படத்தின் ட்ரைலர்.!



Parasakthi Trailer Out Sivakarthikeyan Leads Powerful Tamil Language Political Drama

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்பட முன்னோட்டம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

2026 தேர்தல் பரபரப்பை கருத்தில் கொண்டு அரசியல் யுத்தம் காலத்துக்கேற்ப சினிமா வரை வந்துவிட்டது. திரை நாயகர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததைப்போல, மக்களின் மனதில் மறைந்திருக்கும் மொழி உணவை உறுதி செய்ய சில படங்களும் காலத்தின் கட்டாயம் ஆகி இருக்கிறது.

பேசுபொருளாகும் அரசியல் நிகழ்வுகள்:

அந்த வகையில், சமீபத்திய அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த போராட்டம் 1960 முதல் தொடங்கி மத்திய அரசு Vs தமிழ்நாடு அரசு என்ற முழக்கத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

இதையும் படிங்க: Jana Nayagan Official Trailer: 'இராவணன் மவண்டா.. போர் தொடங்கிருச்சு.. நான் வரேன்' வெளியானது ஜனநாயகன் பட ட்ரைலர்.! 

பராசக்தி ட்ரைலர் Parasakthi Trailer:

 

பராசக்தி:

இந்நிலையில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா, ஸ்ரீ லீலா உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. 

இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முன்னோட்ட காட்சிகள் 1960 சமயங்களில் நடந்த மொழிப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் முன்னோடி தலைவர்களான அண்ணாவின் காலகட்டமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரசியல் ரீதியாக படம் வரவேற்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.