Jana Nayagan Official Trailer: 'இராவணன் மவண்டா.. போர் தொடங்கிருச்சு.. நான் வரேன்' வெளியானது ஜனநாயகன் பட ட்ரைலர்.!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் ட்ரைலர் (Jana Nayagan Movie Trailer) வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக அநீதி, அதிகார அரசியல் மற்றும் மக்களின் குரல் என மையக்கருவை ட்ரைலர் வெளிப்படுத்துகிறது. தொடக்கத்திலேயே வேகமான காட்சிகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. படத்தின் அரசியல் பின்னணி நடப்பு சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளதால், வெளியீடுக்கு முன்பே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
.png)
கதைக்களம் & நடிப்பு
மக்களின் உரிமைகளுக்காக போராடும் சாதாரண மனிதனின் கதையாக படம் இருந்தாலும், விஜயின் கதாபாத்திரம் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அசுர பலம் பொருந்திய வில்லனும் படத்தை பெரிய அளவில் ரசிக்க வைப்பார். எச்.வினோத்தின் அரசியல் சாட்டையடி திருத்தம், அனிருத்தின் இசை போன்றவையும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: கொண்டாடும் ரசிகர்கள்! ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியீடு! ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில்! அதிரடி வீடியோ இதோ!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09, 2025ல் படம் திரையரங்கில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஜன நாயகன் ட்ரைலர் | தளபதி விஜய் | பூஜா ஹெட்ஜ் | எச் வினோத் Jana Nayagan - Official Trailer