BREAKING: பின்னணி பாடகி கே. எஸ் சித்ராவின் சகோதரி மலையேற்றப் பயிற்சியின்போது தவறிவிழுந்து மரணம்! பெரும் அதிர்ச்சி!



ks-chithra-sister-sharada-iyer-trekking-accident-oman

திரையுலகையும் இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், பிரபல பின்னணி பாடகி வின் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையேற்றப் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து

சித்ராவின் சகோதரி சாரதா ஐயர் (52), ஓமன் நாட்டின் மஸ்கட் அருகே உள்ள புகழ்பெற்ற ஜெபல் ஷம்ஸ் மலையில் மலையேற்றப் பயிற்சியில் (Trekking) ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். கடந்த ஜனவரி 2-ம் தேதி இந்த துயர விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நடிகை மனோரமாவின் ஒரே மகன் பூபதி காலமானார்! தமிழ் திரையுலகத்தில் பெரும் சோகம்....

செங்குத்தான மலைப்பாதை தான் காரணம்

செங்குத்தான மற்றும் கடினமான மலைப்பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்ததே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

KS Chithra

உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஓமனில் உள்ள அவரது உடல் வரும் ஜனவரி 7-ம் தேதி கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தாழவாவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சாரதா ஐயரின் இந்த அகால மரணம் சித்ராவின் குடும்பத்தினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.