வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
கள்ளக்காதலுக்கும் மதம் மாறனும்.. கணவனை விட்டு ஓடிய 28 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
கள்ளக்காதலன் மதம் மாற வற்புறுத்தி தொந்தரவு செய்ததால் 28 வயது பெண்மணி தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் ராமதுர்கா, கோனகனூர் கிராமத்தில் வசித்து வருபவர் தெமப்பா. இவரது மனைவி நாகவ்யா வந்தமுரி (வயது 28). தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், நாகவ்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல் பழக்கம்:
இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த தேமப்பா இருவரையும் கண்டித்த நிலையில், நாகவ்யா தனது கள்ளக்காதலில் உறுதியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து கள்ளக்காதலரோடு ஓட்டம் பிடித்ததாகவும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் மோகத்துக்கு பலியான 3 வயது குழந்தை.. பிஸ்கட்டில் விஷம் வைத்து நடந்த பயங்கரத்தின் அதிர்ச்சி பின்னணி.!
மதம் மாற வற்புறுத்தல்:
இவர்கள் இருவரும் ராம துர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கள்ளக்காதலன் மெகபூப் சாப் மதம் மாற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தினமும் தொல்லை கொடுத்து மதம் மாற வற்புறுத்தியதால் கணவனிடமும் செல்ல முடியாமல் கள்ளக்காதலனின் தொல்லையை தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
பெண்மணி தற்கொலை:
இதனால் மன உளைச்சலில் இருந்த நாகவ்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிகாரிகள் நாகவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.