ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!
நம் உடலில் 70 சதவீதம் நீர் எனும் உயிராகாரம் நிரம்பி இருக்கிறது. உடலின் அனைத்து பாகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் மிக முக்கிய அங்கம். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை சீரமைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், செரிமான கோளாறுகள் மற்றும் தோல் பிரச்சினைகள் அனைத்திற்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாகும்.
அன்றாடம் குறைந்தது, 6- 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக்கூடாது. எஃகு அல்லது தாமிரம் போன்ற பாத்திரங்களில் வைத்துள்ள தண்ணீரை அருந்துவது மிக நல்லது. உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தான் உடல் ஆற்றலுடன் செயல்படும். இல்லையென்றால் நமக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படக்கூடும்.

உடல்நலம் மட்டுமல்லாமல், மன நல ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியமானது. காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்தால் உடல் சுறுசுறுப்பாக இருப்பதுடன் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். உணவுக்கு முன் அரை மணி நேரம் முன்பாக தண்ணீர் குடிப்பது நல்ல செரிமானத்தை கொடுக்கும்.
ஒரு நாளைக்கு ஆண்கள் சுமார் 3.7 லிட்டர் மற்றும் பெண்கள் சுமார் 2.7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடல் தாகமாக உணரும்போது குடிப்பது சிறந்தது, ஆனால் உணவுக்கு 15நிமிடங்களுக்கு முன் அல்லது 30 நிமிடங்களுக்குப் பிறகு குடிக்க வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு சற்று முன்பு அதிக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்
உணவுக்கு பின் அதிக தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. வேலை செய்யும் நேரத்திலோ அல்லது வெளியில் செல்லும்போதோ அலட்சியமாக உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தாமல் இருக்கக் கூடாது. இது உடலுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.