இனி கை வலிக்க கஷ்டப்பட்டு பூ கட்ட வேண்டாம்..! பூ மாலை கட்டும் புதிய இயந்திரம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!



flower-garland-making-machines-market-trend

மலர் அலங்காரத் துறையில் தொழில்நுட்பம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பூக்களை மாலையாகத் தொடுக்கும் திறன் இல்லாதவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பூக்கட்டும் இயந்திரங்கள் தற்போது சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

எளிதான செயல்முறை

இந்த இயந்திரங்களில் நூலை மாட்டி பூக்களை பிடியில் வைத்தால் போதும். தானாகவே பூக்கள் முடிச்சிடப்பட்டு அழகான மாலையாக உருவாகிவிடும். மனித உழைப்பைக் குறைத்து வேகத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய சிறப்பு.

பல்வேறு வகைகள் சந்தையில்

தற்போது கைமுறை (Manual), பகுதி தானியங்கி மற்றும் முழு தானியங்கி என பல வகைகளில் Flower Garland Making Machines கிடைக்கின்றன. சிறு கைக்கருவிகள் ரூ.500 முதல் தொடங்குகின்றன. வணிக பயன்பாட்டுக்கான செமி-ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் ரூ.10,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: மரண பயம்! என்ன விட்டுருங்க... கத்தியை தீட்டிய உரிமையாளர்! அமைதியாக பார்த்த வாத்து! நாய் பயந்து நடுங்கி கூண்டுக்குள்.....சிரிப்பூட்டும் வீடியோ!

பல பூக்களுக்கு ஏற்றது

ஜாதிப்பூ, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பல்வேறு பூக்களை இந்த இயந்திரங்களில் எளிதாகக் கட்ட முடியும். இதனால் திருமணங்கள், கோயில் விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான மலர் தேவைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படுகின்றன.

நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் இந்த தானியங்கி மலர் இயந்திரங்கள் மலர் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகளையும் அதிக லாபத்தையும் உருவாக்கி வருகின்றன.

 

இதையும் படிங்க: பார்க்கும் போதே பதறுதே... காதுக்குள் குச்சியை விட்டு மூக்கு வழியாக எடுத்த சிறுவன்! வைரலாகும் வீடியோ!