செய்யுறது தப்பு.... இதுல திமிரு பேச்சு வேற! AC கோச்சில் சிகரெட் குடித்த இளம்பெண்! தட்டிக்கேட்ட முதியவரிடம் அநாகரீகமாக பேசிய பெண்! என்னென்ன பேச்சு பாருங்க....!
ரயிலில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பையும் வசதியையும் புறக்கணிக்கும் சிலரின் செயல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரயில் ஏசி பெட்டிக்குள் தடையை மீறி புகைபிடித்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது வைரல் வீடியோவாக பரவி வருகிறது.
ஏசி பெட்டியில் புகை – பயணிகளுக்கு அவதி
குளிர்சாதன வசதியுடன் இயங்கும் ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண், விதிகளை மீறி சிகரெட் பிடித்ததால் மற்ற பயணிகள் புகையால் கடும் அசௌகரியத்தை சந்தித்துள்ளனர். இதனை கண்ட முதியவர் ஒருவர் மரியாதையாக எச்சரித்தபோது, அந்தப் பெண் அவரிடம் கோபமாக பேசித் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
முதியவரிடம் அநாகரீகமான வாக்குவாதம்
"வாயை மூடு... இது என்ன உங்க அப்பன் வீட்டு ரயிலா?" என அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி அந்த முதியவரிடம் சண்டையிட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் செயல் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: நடு ரோட்டில் நடந்து போன பெண்ணிடம் பைக்கில் சென்ற இளையர்கள் செய்த அட்டூழியம்! வைரல் வீடியோ..!!!
ரயில்வே சட்டத்தின் கீழ் நடவடிக்கை
ரயில்களில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில், தீ விபத்து அபாயத்தையும் பொருட்படுத்தாமல் நடந்துகொண்ட அந்தப் பெண்ணின் செயல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த RPF அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே சட்டம் பிரிவு 167-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற நடத்தையை கண்டித்துள்ளனர். இத்தகைய சட்டமீறல்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவிதிகளை அனைவரும் மதித்து நடப்பதே பாதுகாப்பான பயணத்துக்கு அடிப்படை என்பதும் இந்தச் சம்பவம் மூலம் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.
రైల్లో ఏసీ లో పొగ త్రాగుతూ..
ప్రశ్నిస్తే తిరగబడిన మహిళ!#Smoking #Railways #UANow pic.twitter.com/VVAQajs9Tg
— UttarandhraNow (@UttarandhraNow) February 1, 2026
இதையும் படிங்க: காய்கறி வியாபாரி செய்த அருவருப்பான செயல்! அந்தரங்க உறுப்புகளை தொட்டுவிட்டு அதே கையால்.... வீடியோ வெளியானதால் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்!!!