வாடகை பாக்கி.. குடும்பத்துடன் தாய் விபரீதம்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!



Debt and Rent Crisis Ends in Tragedy: Mother and Two Sons Found Dead in Delhi 

கடன் சுமை மற்றும் வாடகை பிரச்சனை காரணமாக தாய் மற்றும் இரு மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள கல்காஞ்சி பகுதியில் வசித்து வருபவர் அனுராதா கபூர் (வயது 52). இவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (வயது 32) மற்றும் சைதன்யா கபூர் (வயது 27). அனுராதாவின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது மகன்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் குடும்பம் பணக்கஷ்டத்தில் திணறிய நிலையில், மாத வாடகை ரூ.40,000 பணத்திற்கு இவர்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

வாடகை பணம் செலுத்தாமல் தங்கிய குடும்பம்:

கட்டுமான துறையில் பெரிய பொறுப்பில் பணியாற்றி வந்த அனுராதாவின் கணவர் குடும்பத்துக்கு கடன் சுமையை ஏற்படுத்தி உயிரிழந்துவிட்டதால் குடும்பம் நலிவடைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குடும்பத்தினர் வாடகை வீட்டில் தங்கி வந்த நிலையில் வாடகை பணமும் செலுத்தவில்லை. கடந்த ஆண்டு அனுராதாவின் கணவரும் இறந்ததால் வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

delhi

வீட்டை காலி செய்ய உத்தரவு:

ஆனால் அவர்கள் காலி செய்யாமல் இருந்து வந்ததால் உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். வாடகை குறித்து வீட்டு உரிமையாளருடன் அவ்வப்போது வாக்குவாதமும் நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே வீட்டு உரிமையாளர்  நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் உதவியுடன் வீட்டை காலி செய்ய வந்துள்ளார். 

குடும்பமாக தற்கொலை:

அப்போது வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அழைத்தும் திறக்காததால் போலி சாவியை கொண்டு கதவை திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது தாய் மற்றும் இரண்டு மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இவர்களின் தற்கொலை குறிப்பு கடிதத்தில் கடன் தொல்லை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.!