கட்டுமான வேலையில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. 2வது மாடியில் காத்திருந்த எமன்.. தந்தை கண்முன் சோகம்.!



15-Year-Old Boy Dies After Falling From School Construction Site in Chennai

சென்னையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர், காமராஜர் தெரு பகுதியில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இது மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். இந்த பள்ளி வளாகத்தின் தரைத்தளத்தில் இரண்டு அடுக்குடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் பேரா என்பவர் ஈடுபட்டு வருகிறார். 

இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்: 

இவர் தனது 15 வயதுடைய மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை நேரத்தில் இவர்கள் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 15 வயதுடைய சிறுவன் சாரத்தின் மீது நின்று பலகையை எடுக்க முயற்சித்துள்ளார். இதில் இரண்டாவது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். 

சிறுவன் மரணம்

சிறுவன் உயிரிழப்பு:

இந்த சம்பவத்தில் தலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.