உங்களின் கனவில் விநாயகர் இப்படி வருகிறாரா? இதுதான் அர்த்தமாம்..!



dreaming-of-lord-ganesha-heres-what-it-means-according

விநாயகரை கனவில் காண்பது நல்ல விஷயத்தையும், கேடான விஷயத்துக்கு முன்னெச்சரிக்கையாகவும் கவனிக்கப்படுகிறது.

நாம் காணும் கனவுகளில் பொதுப்பலன்கள் என்பது ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் விநாயகரை கனவில் பார்ப்பது நல்ல சகுனம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். கனவில் விநாயகர் வந்தால் மங்களகரமான விஷயம் நடக்கும். வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும். புதிய மாற்றங்கள் நடப்பதை இது குறிக்கும் என்பது ஐதீகம். 

புதிய அத்தியாயம்:
விநாயகர் சிலையை நாம் கனவில் கண்டால் நல்ல சகுனம் என்று கருதப்படுகிறது. நீண்ட கால வேண்டுதல் நிறைவேறப் போவதை இது முன்கூட்டியே குறிக்கும் செயலாகும். புதிய தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயம் போன்ற பயணமும் நடக்கலாம். குதிரையில் விநாயகர் வருவது போல கனவு கண்டால் புனிதமான விஷயத்துக்கு நாம் பயணம் செய்வதை உறுதி செய்யும் கனவாகும். 
Vinayagar

விநாயகரின் அருள்:
இந்த கனவை யாரிடமும் சொல்லாமல் அப்படியே மறைத்து வைத்திருப்பது அந்த கனவு விரைவில் நடக்க வழிவகை செய்யும். விநாயகரை நாம் கும்பிடுவது போல கனவு கண்டால் விரைவில் நமது வேண்டுதல் நிறைவேறும் என பொருள்படும். விநாயகரின் அருள் பெற்று தடைகள் நீங்கும் என்பதை இது குறிக்கிறது. விநாயகர் மூழ்குவது போல கனவு காணும் பட்சத்தில் அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. 

விநாயகர் கனவுப்பலன்கள்:
நமது வாழ்க்கையில் பொருளாதார பிரச்சினை, பொருளாதார இழப்பு போன்றவை ஏற்படுவதை இது முன்கூட்டியே உணர்த்தலாம். விநாயகரை மஞ்சள், குங்குமம் அலங்காரத்தால் காண்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இது பக்தியின் வெளிப்பாடாகவும், வெற்றியின் அறிகுறியாகவும் கவனிக்கப்படுகிறது. 

விநாயகருடன் லட்சுமி தேவி:
எலியுடன் வரும் விநாயகரை பார்த்தால் வாழ்க்கையில் செழிப்பு, மகிழ்ச்சி உண்டாகலாம் என்பது அர்த்தம். விநாயகரிடம் இனிப்பு பெறுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியின் மன நிறைவை குறிக்கிறது. புத்தகம் பெறுவது அறிவு மற்றும் ஞானத்தை எடுத்துரைக்கிறது. விநாயகருடன் லட்சுமி தேவியையும் சேர்த்து பார்த்தால் தடையின்றி வெற்றி கிடைக்கும். லாபம் உண்டாகும் என்பது ஐதீகம்.